வகைப்படுத்தப்படாத

தெரனியாகலை இரட்டைக் கொலை சம்பவம் – சந்தேக நபர் 19 வயதான இளைஞர்

(UDHAYAM, COLOMBO) – தெரனியாகலை மாகல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் படுகொலை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 5 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதானசந்தேகத்துக்குரியவர் பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதால், அவரைக் கைதுசெய்வதற்காக குறித்த குழுக்கள் நிமிக்கப்பட்டுள்ளன.

தெரனியகல பகுதியில் நேற்று இரவு தாய் ஒருவர் தாக்கப்பட்டதுடன், அவருடைய ஏழு வயது மகள் மற்றும் உறவினர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் இடம்பெற்றபோது குறித்து பெண்ணின் கணவர், மரண சடங்கொன்றுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவரின் வீட்டில் இருந்த பயணப் பையை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பயணப் பையில் பெண்களின் உள்ளாடைகள் சில இருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, சந்தேகத்துக்குரியவர் மனநிலை ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

මරණ දණ්ඩනය පිලිබඳ අග්‍රාමාත්‍යවරයා තානාපතිවරුන් හමුවී කරුණු දක්වයි.

Indian finds missing father in SL after 21 years through YouTube video

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட வழக்கில் இழப்பீடு தர முடியாது-மார்க் சுக்கர்பெர்க்