சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரதான காரணம் இதுவே-ஜனாதிபதி

மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு

விஜயகலா மகேஷ்வரன் பதவி நீக்கப்படுவாரா?