சூடான செய்திகள் 1

எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

(UTV|COLOMBO) சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 4ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காலிமுகத்திடலை அண்மித்த வீதிகளில் நேற்றுமுன்தினம் முதல் இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளையும்(03) ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதால் சில வீதிகள் மூடப்படவுள்ளன.

இதற்கமைய காலிமுகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலும் சைத்திய வீதியூடாகவும் வாகனங்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் கொள்ளுப்பிட்டி சந்தியால் காலிமுகத்திடல் நோக்கி பிரவேசிப்பதற்கும், சென். மைக்கல்ஸ் வீதியால் காலிமுகத்திடல் நோக்கிப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

வடமேல் மாகாணத்திற்கு மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை கொண்டுசெல்லும் திட்டப்பணிகள் ஆரம்பம்

ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை பயிற்சி