வகைப்படுத்தப்படாத

காவற்துறை ஒன்றுக்கு முன்னாள் தீவிரநிலை: 8 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்தமை தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய நபருக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் சிலர் நேற்று இரவு பிங்கிரிய காவற்துறைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவற்துறை நோக்கி கற்களை எறிந்தும், காவற்துறைக்கு முன்னாள் உள்ள பாதையில் டயர்களை இட்டு எரித்தும், அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பிங்கிரிய பிரசன்னகம பிரதேசத்தில் வேன் ஒன்றும், உந்துருளியொன்றும் மோதிய இந்த விபத்தில் உந்துருளியில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.

பின்னர் விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவற்துறை கைது செய்துள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்த நபர்களது என சந்தேகிக்கப்படும் 20 உந்துருளிகளை காவற்துறை கைப்பற்றியுள்ளது.

Related posts

மரண தண்டனையில் இருந்து தப்பிய ஐரோப்பிய கர்ப்பிணி பசு

CID arrests NPC Secretary

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை பணிபகிஷ்கரிப்பில்