சூடான செய்திகள் 1

தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்

(UTV|COLOMBO)-தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தற்போது காணப்படும் சட்டதிட்டங்கள் போதுமானதாகவில்லை என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான குற்றங்கள் தொடர்பான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், தொல்பொருள் பெறுமதி கொண்ட இடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதனை பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிப்பு

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து