சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV|COLOMBO)-ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள் வெவ்வேறாக ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி இந்தக் கோரிக்கைகளை தயவுடன் நோக்கி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் நடவடி்கை எடுக்குமாறு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

 

 

 

Related posts

த.தே.கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.முன்னணி இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து