வகைப்படுத்தப்படாத

சகல பாதாள உலகக் கும்பல்களும் ஒடுக்கப்படு;ம் – பொலிஸ்மா அதிபர்

(UDHAYAM, COLOMBO) – சகல பாதாள உலகக் கும்பல்களையும் குறுகிய காலத்தில் ஒடுக்கப் போவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான விஹாரையின் கலசத்தை திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பொலிஸ் அதிரடிப்படையின் துணையும் இதற்காக பெற்றக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ்மா அதிபர் கூறினார்.

Related posts

பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது

துபாய் மரினா பகுதியில் புதிய துறைமுகம்

Over 600,000 people affected by drought – DMC