வகைப்படுத்தப்படாத

காங்கிரஸ் கட்சியில் முதன்முறையாக பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு

(UTV|INDIA)-இந்திய பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

குலாம் நபி ஆசாத், உத்தரபிரதேசத்தின் பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஹரியானா மாநிலத்தில் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவிற்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக அவர் செயற்படுவார்.

பிரியங்கா காந்தி தனது 16 ஆம் வயதில் முதன்முறையாக பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

சோனியா காந்தியிடம் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவாரா என கடந்த ஆண்டு கேட்கப்பட்டபோது, அரசியலுக்கு வருவது குறித்து பிரியங்கா தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

 

 

 

 

Related posts

No evidence to back allegations against Dr. Shafi – CID

கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி

Music to the ears