சூடான செய்திகள் 1

மாணவர்கள் சிலரை தாக்கிய சம்பவம்-பல்கலை மாணவர்கள் 13 பேர் கைது

(UTV|COLOMBO)-வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த 13 சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட மாணவர்கள் உந்துருளிகளில் புதிய மாணவர்கள் இருந்த இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Related posts

ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்று இலங்கைக்கு விஜயம்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்…