சூடான செய்திகள் 1

ஃபிலிப்பின்ஸ் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

(UTV|COLOMBO)-ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஃபிலிப்பின்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்குள்ள மெனிலா நகரில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

நேற்று பிற்பகல் ஃபிலிப்பின்ஸ் நோக்கி பயணமான ஜனாதிபதி, நேற்று இரவு அங்கு சென்றடைந்தார்.
ஃபிலிப்பின்ஸின் மெனிலா நகரில் உள்ள நினோய் அகினோ சாவதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய ஜனாதிபதியை, அந்த நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.
அத்துடன், ஃபிலிப்பின்ஸின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரேவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

களு, ஜின் கங்கைளின் நீர் மட்டம் உயர்வு

நிறைவுக்கு வந்தது நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் விவகாரம்

பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்