சூடான செய்திகள் 1

புதிய களனி பாலத்திற்கு பூட்டு

(UTV|COLOMBO)-புதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்டம் வரையிலான வாகன போக்குவரத்து நாளை (15) மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதனடிப்படையில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் மின்னழுத்தமுள்ள மின் இணைப்பு ஒன்றை வழங்குவதற்காக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

ஹபரகட வசந்தவின் மனைவி கைது

வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது