சூடான செய்திகள் 1

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது, கென்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் மேனக ராஜகருணவிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை நிறைவுக்கு வந்தது.

இதனையடுத்து சில வணிக வங்கிகளின் அதிகாரிகளிடம் சாட்சி விசாரணை இடம்பெற்றது.

பின்னர் வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 11ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்தவின் பெயர் பரிந்துரை

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மண்சரிவு காரணமாக போக்குவரத்து மட்டு

அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் விநியோக நடவடிக்கை முன்னெடுப்பு