சூடான செய்திகள் 1

வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம்

(UTV|COLOMBO)-தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக மஹிந்த

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

கொரோனா வைரஸ் : 20 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு