சூடான செய்திகள் 1

பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் 8 பேர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைத்தோட்டம், பதுளை, யக்கல மற்றும் பாணதுறை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் வாழைத்தோட்டம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தேக நபரிடம் இருந்து 20 கிராம் 840 மில்லி கிராம் ஹெரோயினும் அடுத்த நபரிடம் 2 கிராம் 410 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை – பசரை பிரதாக வீதியின் சிறிமல்கொட சந்தியில் ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 12 கிராம் 705 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

editor

சைட்டம் பெயர்மாற்றம்…