சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட அவர், இந்த நாட்டின் 06 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார்.

இந்நிலையில், இன்று(08) பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி களுகங்கை நீர்நிலை வேலைத்திட்ட நிறைவு நிகழ்வும், மொரகஹாகந்த வேலைத்திட்டத்தின் கீழ் வருகின்ற பழைய லக்கலை நகருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கலை புதிய நகரை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று நடைபெறவுள்ளன.

Related posts

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற உத்தரவு

editor

அமைச்சர்களின் அரச வாகனம், வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்க வேண்டும்