சூடான செய்திகள் 1

04 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்

(UTV|COLOMBO)-04 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(07) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சப்ரகமுவ, தென் , ஊவா மற்றும் வட மாகாணங்களுக்கே இவ்வாறு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய 9 மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகிய நிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை 5 மாகாணங்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.

இந்நிலையில், ஏனைய 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது

புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்