சூடான செய்திகள் 1

பொலிஸ் நிலைய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து

(UTV|COLOMBO)-பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி பொலிஸ் நிலைய அதிபர்கள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டன.

தற்போது அது பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரை மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இடமாற்றம் பெற்றவர்களுள் 27 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் 45 பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கே.டி லால்காந்த பிணையில் விடுதலை

இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு…

அன்று ஆடைத் தொழில் மேம்படுத்தப்பட்டது – இன்று கஞ்சா செய்கைக்காக சட்டபூர்வ ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor