கிசு கிசு

தண்டனைக்கு முகம் கொடுக்க நான் தயார்…

(UTV|COLOMBO)-போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாக, மோசடி எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
வரக்காபொலயில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
தாம் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து படைப்பிரிவுகளில் பயிற்சிப் பெற்றதாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் உண்மையானவை.
அதற்காக வழங்கப்படுகின்ற தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்வதற்காக இடம்பெற்ற சூழ்ச்சியும் உண்மையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காதலர்களுக்கு காவலாக பொலிஸார்?

எங்களை பின்தொடர வேண்டாம் – ஹரி தம்பதி எச்சரிக்கை [PHOTOS]

Prank மற்றும் Tik – Tok ஆகியவற்றுக்கு தடை