வகைப்படுத்தப்படாத

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|RUSSIA)-ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் எரிவாயு வெடித்ததால் 48 வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந் துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா நாட்டின் செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 48 வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்நிலையில், இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வசித்தவர்களில் மேலும் 20 பேரை காணவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளதால் தேடுதல் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

Supreme Court issues Interim Order against implementing death penalty

வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்