சூடான செய்திகள் 1

அமைச்சுக்களுக்கான நிறுவனங்களை பகிர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-அமைச்சுக்களுக்கான நிறுவனங்களை பகிர்தல் தொடர்பில் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசில் அமைச்சுக்களுக்கான நிறுவனங்கள் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் சில அமைச்சுக்களுக்கு அதிகளவான நிறுவனங்களும் சில அமைச்சுக்களுக்கு குறைந்தளவான நிறுவனங்களும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பகிரப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சர்கள் தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அனைத்து அமைச்சுக்களாலும் அதிகளவும் வேலை நடைபெறும் விதத்தில் நிறுவனங்களை பகிர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அமைச்சுக்களது நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டுமொரு முறை ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளில் 48 மனுக்கள் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு

பிரபல பாடகர் சிரில் பெரேரா காலமானார்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஐ.ம.சு. கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நிறைவு-ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் ஆரம்பம்