சூடான செய்திகள் 1

இன்று முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

(UTV|COLOMBO)-ஆட்பதிவுத் திணைக்களமானது இன்று(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

“இந்த அடையாள அட்டைகள், ஸ்மார்ட் தேசிய அட்டைகளாக அறிமுகப்படுத்தப்படுவதோடு, அனுமதி பெற்ற ஒளிப்படப்பிடிப்பு நிலையங்களில் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டு, ஒளிப்படத்துக்கான பற்றுச்சீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு, விண்ணப்பதாரிகள் புதிய அடையாள அட்டைகளுக்கான ஒளிப்படங்களை மின்னஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும்.

மேலும், நாடு முழுவதும், 2100 ஒளிப்பட நிலையங்கள், இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

எரிபொருளுக்கான விலைச்சூத்திர பட்டியல் நடைமுறை தொடர்ந்து முன்னெடுப்பு

“போலி ஆவணம் மூலம் பாராளுமன்றிற்கு வந்த வெளிநாட்டு பெண்” நடவடிக்கை அவசியம் – முஜீபுர் ரஹ்மான்

96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை மட்டக்களப்பில் கொண்டாட முடிவு!