சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல்

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர்கல்வியைத் தொடர்வதற்காக சமர்ப்பிக்கும் வகையில் இந்த சான்றிதழ் இன்று முதல் விநியோக்கப்படவுள்ளது.

கடந்த வாரம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி இருந்தன.

இந்த சான்றிதழை சாதாரண சேவை மூலம் அல்லது ஒருநாள் சேவை மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒருநாள் சேவை ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கு 600 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

அத்தடன் அதன் மேலதிக பிரதி ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு 350 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

விமான நிலையத்தில் ஆர்பாட்டம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு

வசந்த கரன்னாகொடவின் வாக்குமூலங்கள் நிறைவு…