சூடான செய்திகள் 1

மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதம் தீர்க்கப்படும்-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டு பிரச்சினை ஜனவரி மாதமளவில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து வகையும் இறக்குமதி செய்யப்படவில்லை.

தற்போதைய நிலையில், இருதய நோய் போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடந்த வருடத்தில் மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டதனால், 4.7 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல நியமனம்

பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவியுயர்வு

திட்டமிட்டபடி புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில்