சூடான செய்திகள் 1

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காவல்துறை உத்தியோகத்தர் கொலை

(UTV|COLOMBO)-ஜா-எல தெற்கு நிவந்தம பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

49 வயதுடைய நாராஹேன்பிட்டி காவல்துறை வைத்தியசாலையில் கடமை புரியும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர் தற்பொழுது தலைமறைவாகியுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

கொழும்பு கோட்டை – வங்கி மாவத்தைக்கு தற்காலிக பூட்டு

பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக 30,830 மாணவர்கள் தெரிவு