வகைப்படுத்தப்படாத

விமான நிலையத்தில் வாகனங்கள் செல்ல தனித்தனி வழி

(UTV|INDIA)-சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் தற்போது உள்நாட்டு முனையம் வழியாக வந்து பன்னாட்டு முனையம் வழியாக வெளியேற வேண்டும். விரைவாக சென்றால்தான் சுங்க கட்டணம் இல்லாமல் இலவசமாக செல்ல முடியும் என்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்துக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைத்து சோதனை அடிப்படையில் வாகனங்களை இயக்கியதில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் இன்று காலை 11 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.

Related posts

ஜனவரி முதல் அமுலுக்கு வரும் பொலித்தீன் தடை

President, Premier seeks stronger ties with UK

இந்திய சுற்றுலாத்துறைக்கு ஓமன் அரசு விருது