வகைப்படுத்தப்படாத

´பாக்சிங் டே’என அழைப்பது ஏன்?

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயம் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அதில் பரிசு பொருட்கள் மற்றும் நன்கொடை அளிப்பார்கள். அந்த பெட்டியை மறுநாள் பிரித்து ஏழைகளுக்கு வழங்குவார்கள்.

அந்த நாளை ´பாக்சிங் டே´ என்று அழைக்கிறார்கள். இதேபோல் கூலி தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்லும்போது அவர்களது முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்குவார்கள்.

இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டி ´பாக்சிங் டே டெஸ்ட்´ என்று அழைக்கப்படுகிறது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி அவுஸ்திரேலியா அணி மெல்போர்ன் மைதானத்தில் ஏதாவது ஒரு அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடும். இம்முறை இந்திய அணி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டில் விளையாடுகிறது.

 

 

 

 

Related posts

Music to the ears

Kingswood, Vidyartha, St. Anthony’s and Dharmaraja promoted to division one

ரஷியா தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பெண்கள் பலி