சூடான செய்திகள் 1

UPFA உறுப்பினர்கள் இன்னும் UPFA இல் அங்கம் வகிப்பதாக அறிவிப்பு

(UTV|COLOMBO)-2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற செயலாளருக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

இன்று(25) முதல் நாள்தோறும் சுழற்சி முறையிலான மின் விநியோகத் தடை

எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது