வணிகம்

புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்காக கால்நடைகள்

(UTV|COLOMB)-திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்காக கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் முயற்சிக்கான திட்டத்தின் 5ஆம் கட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று  காலை நடைபெற்றது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்தினால் இதற்கான தி;ட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

வங்கி கடன் வட்டி சதவீதத்தினை குறைக்க நடவடிக்கை

மீன்விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு