சூடான செய்திகள் 1

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம்…

(UTV|COLOMBO)-பாராளுமன்ற  எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் நோக்கில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற  கட்டித் தொகுதியில் பிற்பகல் ஒரு மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாராளுமன்ற  ஆசன ஒதுக்கீடு ஒன்று மேற்கொள்ளப்படும் என, பாராளுமன்ற  படைகல சேவிதர் நரேந்திர ஃபெனான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்ற பாதுகாப்பு தொடர்பிலும் இன்று சபாநாயகருடன் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக, பாராளுமன்ற  படைகல சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

(UPDATE)-ஆமர் வீதியில் துப்பாக்கி சூடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை