வகைப்படுத்தப்படாத

ஈராக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்காவின் புதிய குடிவரவு சட்டத்தின் கீழ் ஈராக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அவரது அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக அவர் விடுத்திருந்த குடிவரவு சட்ட நிறைவேற்று உத்தரவில் ஈராக் உள்ளிட்ட 7 நாடுகளின் அகதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த உத்தரவு சட்டச் சிக்கலால் தடைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் அவர் புதிய குடிவரவு நிறைவேற்று உத்தரவை இன்று அறிவிக்கவுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் ஈராக் மீதான தடை நீக்கப்படவுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் செயற்பாட்டில் ஈராக் முக்கிய பங்கினை வகிக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க ராஜங்க திணைக்களம் மற்றும் பாதுகாப்பு தலைமையகம் என்பவற்றின் அழுத்தம் காரணமாகவே டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

Related posts

கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; இரண்டு பேர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்