சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை கே. சிறில் பெரேரா மாவத்தை, வாசல சந்தியில் இருந்து வோல்ஸ் லேன் வீதி சந்தி வரையான வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது.

குறித்த பகுதியில் குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் இடம்பெற உள்ளதால் நாளை (14) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக அந்த வீதியை பயன்படுத்துவோர் குறித்த நாட்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் ஜோன் ஆர் த சில்வா மாவத்தையூடாக உள்நுழைபவர்கள் பீல்ட் வீதியூடாக அளுத்மாவத்தைக்கு சென்று மோதர மற்றும் மட்டக்குளிக்கு செல்ல முடியும்.

அத்துடன் மோதர மற்றும் மட்டக்குளி ஊடாக உள்நுழைபவர்கள் வேல்ஸ் வீதியூடாக அளுத் மாவத்தைக்கு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்-வஜிர

நாளை முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…