சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கையால் விருதை வாங்க மறுக்கும் கலைஞர்

(UTV|COLOMBO)-பிரபல மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி என்பவர் தனக்கு ஜனாதிபதி கையால் வழங்கப்படவிருந்த விருதொன்றை வாங்க மறுப்புத் தெரிவித்து இது தொடர்பில் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்குரிய கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் மூத்த கலைஞரான ஜயசிறிக்கும் கலாபூஷண விருது கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கலாசார திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த விருது விழாவில் பற்கேற்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி கையால் விருதைப் பெற மாட்டேன் என்றும் டப்ளிவ் ஜயசிறி தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…

UPDATE-2019ம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம் (நேரடி)

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இல்லை என ஹெரிசன் தெரிவிப்பு