சூடான செய்திகள் 1

நீரில் மூழ்கிய தேரரை காணவில்லை

(UTV|COLOMBO)-யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்த பகுதியில் தேரர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (12)  தேரர் களனி கங்கையில் சில தேரர்களுடன் நீராட சென்ற போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நிட்டம்புவ, நாபாகொட விகாரையை சேர்ந்த 13 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேரரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யட்டியாந்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தி

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை

மன்னாரில் ஏற்படும் மின்தடையை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு சியம்பலப்பிட்டியவிடம் ரிஷாட் வேண்டுகோள்