சூடான செய்திகள் 1

உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த மர்ம கும்பல்

(UTV|COLOMBO)-சுன்னாகத்தில் உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த 10 பேர்கள் கொண்ட கும்பல், அடாவடி செய்து பெற்றோல் குண்டுகளை வீசி தீ வைத்து சென்றுள்ளதாக சுன்னாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

இந்த சம்பவத்தை ஆவா குழுவினரே முன்னெடுத்தனர் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் சம்வபம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையம் அமைக்க திட்டமிட்டிருந்த வளாகத்துக்குள் முகத்தினை துணியால் கட்டிய 10 பேர் கொண்ட கும்பல் அங்கு இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையத்தினை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

 

 

 

 

Related posts

முஸ்லிம் திருமண வயதெல்லை – அனுர அரசிலும் சர்ச்சை | வீடியோ

editor

அமைச்சுகளின் காரியாலயங்களுக்கு STF

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு

editor