சூடான செய்திகள் 1

அரசியல் நெருக்கடியை தீர்க்க தலைவர்கள் முன்வரவேண்டும்

(UTV|COLOMBO)-இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வதற்கு தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை​களை ​மேற்கொள்ள வேண்டுமென, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையில் உள்ள நட்புறவானது எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (9) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரூபாயின் வீழ்ச்சியால் வர்த்தகத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்களென்றும் இது மிகவும் பாரதூரமான நிலை என்றும் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

குப்பைகள் அடங்கிய கொள்கலன்களில் மனித எச்சங்கள் (Breaking news)

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

போதைப்பொருள் வியாபாரிகள்-நாட்டிற்கு புதியதொரு சவால்