சூடான செய்திகள் 1

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு புகையிரத சேவை…

(UTV|COLOMBO)-பாடசாலை விடுமுறை காலத்தில் மாணவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் மலையக பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக் கூடும் என்ற நோக்கில் விஷேட புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு மலைநாட்டுக்கான புகையிரத மார்க்கத்தில் விஷேட புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக
புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளாந்தம் காலை 7.30 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை வரை பயணிக்கவுள்ளது.

மறுநாள் முற்பகல் 9.30 அளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளதாக கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது! ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

எல்பிட்டிய தேர்தல் – விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது