கிசு கிசு

முடிவை மாற்றினார் நாமல் குமார?

(UTV|COLOMBO)-சில அரசியல்வாதிகள் தான் அரசியலுக்கு வருவதை விரும்பாத காரணத்தால், தான் அரசியலுக்கு வர தீர்மானித்த முடிவை மாற்றியுள்ளதாக, ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

எனவே தொடர்ந்தும் தான் ஊழல் மோசடி தொடர்பானத் தகவல்களை ​வெளிப்படுத்தியும் நாடு மற்றும் சூ​ழலை பாதுகாப்பதற்காக பங்களிப்புச் செய்து மக்கள் பிரதிநிதிகளை விட நாட்டுக்கு சேவையாற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம், பேரணி, கூட்டங்களை நடத்தவுள்ளதுடன், இதன் முதலாவது கூட்டத்தை எதிர்வரும் 5ஆம் திகதி மஹாஓய நகரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

கொரோனாவும் ரணிலின் ஊடக அறிக்கையும்

திலினி உள்ளிட்ட நால்வருக்கு, நவம்பர் 30 வரை விளக்கமறியல்!

வைரஸ்கள் 3 மாத காலம் உடலில் ஒளிந்திருக்கும்