கேளிக்கை

கைதாவாரா செளந்தர்யா ரஜினிகாந்த்?

(UDHAYAM, COLOMBO) – சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. அண்மைக்காலமாக அவரது பெயர் செய்திகளில் அடிக்கடி அடிபட்டது. அதற்கு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரமாகும்.

இந்நிலையில் அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஆழ்வார்ப்பேட்டை அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் மணிக்குக் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக செளந்தர்யாவிடம் இதர ஆட்டோ ஓட்டுநர்கள் வாக்குவாதம் செய்ததாக அறியப்படுகிறது.

உடனே முக்கியஸ்தர் ஒருவர் நேரில் வந்து சமரசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை அங்கிருந்த சிசிடிவி காட்சி மூலம் விசாரணை செய்துவருகிறார்கள்.

Related posts

Avengers Infinity War பார்த்தவர் மாரடைப்பால் மரணம்

பிரியங்கா சோப்ரா மனிதாபிமான விருதுக்கு தெரிவு

இந்த அம்மணி எவ்வளவு சம்பளம் கேட்கிறார் தெரியுமா?