சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறி இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை

(UTV|COLOMBO)-மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அடுத்த மாதமளவில் நிலைமை வழமைக்குத் திரும்பும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், மழையுடனான வானிலையின்போது மரக்கறிகளைப் பாதுகாப்பதற்கான செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மரக்கறிகளின் விலை நாளாந்தம் அதிகரிப்பதாக புறக்கோட்டை, மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

ஒரு கிலோகிராம் கரட், கறிமிளகாய் ஆகியவற்றின் விலை 300 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் காமினி ஹந்துன்கே கூறியுள்ளார்.

ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் 500 ரூபா முதல் 550 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புறக்கோட்டை மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இந்தியா பயணம்

மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு! தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

உடனடி அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்