சூடான செய்திகள் 1

S.T.F மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முக்கிய புள்ளிகள் இருவர் பலி…

(UTV|COLOMBO)-பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பாரியளவிளலான திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொட்டாவ, ருக்மல்கம வீதியில் பொலிஸாருடன் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திலேயே குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த மாதம் மாத்தறை நகைக்கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் எனவும் கூறப்படுகின்றது.

 

 

 

 

Related posts

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அதிரடி செய்தி

ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்ய உத்தரவு

அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிபுறக்கணிப்பில்…