சூடான செய்திகள் 1

தேசிய மீலாதுன் நபி விழா…

(UTV|COLOMBO)-நபிகளாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தேசிய  மீலாதுன் நபி விழா கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெறும் இந்த விழாவின் நோக்கம் முஹம்மத் நபியின் வழிகாட்டல்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதாகும்.
அமைச்சர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பைசர் முஸ்தபா நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் ரி.ஜி.எம்.வி.கப்புஆரச்சி உட்பட பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

Related posts

தேசிய புனித ஹஜ் சட்டத்தை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் 9வது மரணமும் பதிவு

மாத்தறை மாணவன் உயிரிழப்பு – மூன்றாவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்