சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் கூட்டப்பட்டது சட்டத்துக்கு முரணானதா?

(UTV|COLOMBO)-கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என்று உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 04ம் திகதி விசாரணைக்கு அழைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் விசாரணை நாளான எதிர்வரும் 04, 05, 06 ம் திகதிகளில் இந்த மனுவை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்ட மா அதிபர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தனது மனு மூலம் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

களுகங்கை திட்டத்தின் பூர்த்தி , லக்கல புதிய பசுமை நகர அங்குரார்ப்பண வைபவம் இன்று(08)

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

editor

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்