வணிகம்

சந்தையில் போதியளவிலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

(UTV|COLOMBO)-சகல அத்தியாவசிய பொருட்களும் போதுமான அளவு சந்தைகளில் காணப்படுவதாக அத்தியாசிய உணவுப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் வர்த்தக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் ஹேமக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவற்றின் விலைகளும் சற்று குறைவடைந்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு கிலோ சீனியின் மொத்தவிலை இன்று 94 ரூபாவாக காணப்படுகிறது. ஒரு கிலோ பருப்பின் மொத்தவிலை 103 ரூபாவிற்கும் 104 ரூபாவிற்கும் இடையில் காணப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விலைகளும் சற்று குறைவடைந்து காணப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியும் போதுமான அளவு சந்தைகளுக்கு கிடைப்பதாக ஹேமக்க பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

எதிர்வரும் பண்டிகைக்காலத்திற்காக வர்த்தகர்கள் போதுமானளவு அத்தியாவசியபொருட்களை இறக்குமதிசெய்திருப்பதாகவும் ஹேமக்க பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

Related posts

மொத்த விற்பனையாளர்களுக்கு மாத்திரம் அனுமதி

தேங்காய் எண்ணெய்க்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS