வகைப்படுத்தப்படாத

சவுதியுடனான உறவுகள் தொடரும்…

(UTV|COLOMBO)-சவுதி அரேபியாவுடனான இராஜதந்திர உறவுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலுப்படுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில், சவுதி அரசு மீதான சர்வதேச கண்டணங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவினால் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா தமது உறுதியான பங்குதாரர் எனவும் அது அமெரிக்காவில் பெருந்தொகையான முதலீட்டை மேற்கொள்வதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

ஜமால் கஷோகியின் கொலையுடன் அந்நாட்டு மன்னர் சல்மானுக்குத் தொடர்பிருப்பதை, ட்ரம்ப் நன்றாக அறிந்தவர்.

ஆயினும் எவ்வாறான சந்தர்ப்பத்திலும் சவுதியுடனான உறவுகள் தொடரும் என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கடந்த மாதம் 2ஆம் திகதி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, சவுதி மீது சர்வதேச ரீதியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு, கஷோகியின் கொலை மன்னரின் உத்தரவின் பேரிலேயெ நடத்தப்பட்டிருக்கலாம் என நம்புவதாக அமெரிக்காவின் CIA தெரிவித்திருந்தது.

 

 

 

Related posts

வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது…

Michael Jackson honoured on 10th anniversary of his death