வணிகம்

ஜப்பானுக்கான ஏற்றுமதியினை அதிகரிக்க நடவடிக்கை…

(UTV|COLOMBO)-ஜப்பானுக்கான ஏற்றுமதியினை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவராலயத்துடன் இணைந்து, ஜப்பானில் உள்ள இறக்குமதியாளர்களைக் கொண்ட குழுவொன்றை இலங்கைக்கு வரவழைக்கும் செயல்பாட்டில், ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக, ஜப்பானில் இருந்து வர்த்தக குழுவொன்று அடுத்த மாதம் மூன்றாம் திகதி இலங்கை வரவுள்ளது.

இதன்போது, இந்த குழுவினர் இலங்கையில் உள்ள ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

பண்டிகைக் காலத்தையொட்டி ஆடை விற்பனையில் வீழ்ச்சி

அலங்கார மலர் வளர்ப்பு மற்றும் தாவர ஏற்றுமதியில் 16 மில்லியன் டொலர்கள் வருமானம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி