கிசு கிசு

பாலித தெவரப்பெரும தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு?

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று பொலிஸ் அவசர இலக்கத்துக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த கூறினார்.

நேற்று பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபஷ ஆற்றிய உரையின் நம்பகத்தன்மை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து பாராளுமன்றத்தில் அமைதியற்ற நிலை தோன்றியது.

இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருப்பது போன்ற காட்சிகள் ஊடகங்களில் வௌியாகியிருந்தன.

 

 

 

 

Related posts

கிரிக்கெட்டில் தற்போதுள்ள அதிகாரிகளுக்கு வெட்கம் இல்லை : நாமலை வெளுத்து வாங்கும் அர்ஜுன [VIDEO]

கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்நாள் அமைச்சருமான அர்ஜுன மீது பாலியல் குற்றச்சாட்டு…

பால் மா விலை அதிகரிக்கப்படுகிறது?