வகைப்படுத்தப்படாத

பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

(UTV|INDIA)-தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பன்றிக்காய்ச்சலால் கோவை மற்றும் திருச்சியில் 2 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பரவி வரும் டெங்குக் காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த்தாக்கம் காரணமாக 4,500-இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தினால் இந்த நோய்த்தாக்கம் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை உயர்வு

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

வடகொரிய தலைவர் சீனாவுக்கு பயணம்