வகைப்படுத்தப்படாத

ஏமன் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|YEMEN)-ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு தரப்புக்குமான இந்த போரில் அப்பாவி மக்களும் சிக்கி உயிரிழக்கின்றனர். இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 43 கிளர்ச்சியாளர்களும், அதிபர் ஆதரவு படையினர் 9 பேரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

அங்கு தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி 110 கிளர்ச்சியாளர்கள், அதிபர் ஆதரவு படையினர் 32 பேர் மற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

சர்வதேச வெசாக் தின வைபவம் இன்று ஆரம்பம்

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஆரம்பம்

මරණ දඬුවමට එරෙහි රිට් ආඥා පෙත්සම සලකා බැලීම අද