வகைப்படுத்தப்படாத

விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் தொடர்பில் ஆய்வில் தகவல்

(UDHAYAM, COLOMBO) – விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக உடலை புத்தாக்கம் செய்ய முடியும் என்று அமெரிக்காவின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் விரதத்தின் ஊடாக குருதியின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரியவந்துள்ளது.

விலங்குகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதியாகி இருக்கிறது.

விரதம் அனுஷ்டிக்கும் போது, பல்வேறு காரணங்களால் உடலில் செயலிழந்த கலங்களும், உறுப்புகளும் மீண்டும் உருவாக ஆரம்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாதாந்தம் 5 நாட்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் விரதம் பிடிக்க விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐந்து தினங்கள் உணவை சுருக்கி விரதம் பிடிப்பதுடன், எஞ்சிய 25 நாட்கள் சாதாரணமான உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பது நன்மையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக நீரிழிவு நோய்க்கும் நிவாரணம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் ஒரு வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இதனை கடைபிடிக்க வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

 

 

Related posts

13 பவுண் நகைகளுடன் தலைமறைவான தம்பதியினர் கைது

இணையத்தளத்தினூடாக ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம்

Lion Srilal Fernando, MJF appointed District Governor of Lions Clubs International District 306 A1