வகைப்படுத்தப்படாத

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

(UTV|ZIMBABWE)-சிம்பாப்வே நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மீண்டும் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றில் ஆஜர்

பிரேசில் நாட்டில் வெடிகுண்டு வீசி ஜெயில் உடைப்பு

Devotees restricted from entering ‘Maha Maluwa’